ADDED : மார் 28, 2025 05:32 AM
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கவில் அருகே அனுமதியின்றி சவுடு மணல் ஏற்றி வந்த லாரியை சப் கலெக்டர் கிஷன்குமார் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கரை, லால்பேட்டை அருகே, நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரி அதிவேகமாக சென்றது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் லாரியை துரத்தி சென்று, நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.
அதில் நெய்வேலியில் இருந்து சவுடு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, கொல்லிமலை கீழ் பாதி வி.ஏ.ஓ., ரவி கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார், டிப்பர் லாரியை பறி முதல் செய்து, நெய்வேலி அடுத்த ஆதண்டார் கொல்லையைச் சேர்ந்த டிரைவர் சந்தோஷ், 30; என்பவரை கைது செய்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த நெய்வேலியை சேர்ந்த சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.