/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு
/
மருமகளுக்கு மிரட்டல்; மாமனார் மீது வழக்கு
ADDED : மார் 28, 2025 05:31 AM
விருத்தாசலம்; விவாகரத்து கோரிய மருமகளை வீட்டிற்குள் விட மறுத்து மிரட்டிய மாமனார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் இளையராஜா மனைவி ஜெனிதா, 31; கணவர் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு சென்ற ஜெனிதாவை, மாமனார் ரபேல், 60; மற்றும் உறவினர்கள் ஆபாச மாக திட்டி, வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி மிரட்டியுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், ரபேல் உள்ளிட்ட மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.