ADDED : ஜூன் 26, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி- என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 1975--- 76ம் ஆண்டில் 10ம் வகுப்பு படித்த 49 முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளியில் படித்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொன்விழா ஆண்டாக கொண்டாடினர்.
பள்ளி நாட்களில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பள்ளியில் படிக்கும் 500 மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினர்.