ADDED : ஜூன் 25, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில், வீரக்குமாரசாமி கோவில் எதிரில் தனியார் மருத்துவமனை உள்ளது. வெள்ளகோவில், கொங்கு நகரை சேர்ந்த ராஜேந்திரன், 50, மேனேஜராக வேலை செய்து வருகின்றார். மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் நேற்று இருந்தபோது,
ஒரு நபர் துாக்க மாத்திரை கேட்டுள்ளார். மருத்துவர் பரிந்துரையின்றி தர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் வெளியே சென்ற ஆசாமி, ராஜேந்திரன் இல்லாத சமயத்தில் மருந்தகத்துக்கு வந்து, 3,௦௦௦ ரூபாயை திருடி தப்ப முயன்றார். இதைப்பார்த்து ராஜேந்திரன் சத்தமிடவே, அப்பகுதியினர் பிடித்தனர். விசாரணையில் கோவை, ரத்தினபுரி அஜித்குமார், 26, என்பது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசில் ஒப்படைத்தனர்.