ADDED : ஜூன் 25, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று தொடங்கி, ஜூலை 2 வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் எழுத, 1,497 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்காக ஈரோட்டில் கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி, பவானியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபியில் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலத்தில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி என நான்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 12 பேர் ஸ்கிரைபர் (சொன்னதை கேட்டு எழுதும்) உதவியுடன் தேர்வெழுதுகின்றனர்.