/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ .27.61 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் பறிமுதல்
/
ரூ .27.61 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் பறிமுதல்
ரூ .27.61 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் பறிமுதல்
ரூ .27.61 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் பறிமுதல்
ADDED : செப் 25, 2025 02:42 AM
ஈரோடு ;ஈரோட்டுக்கு, உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் எடுத்து வரப்பட்ட, 27.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் இருந்து, திருவனந்தபுரம் செல்லும் அஹில்யா நகரி அதிவிரைவு ரயில், நேற்று காலை சேலம் வழியாக ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் முத்துசாமி, ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் அந்த ரயிலில், ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்ற பயணி நடந்து கொண்டார்.
இதையடுத்து, அவரது பையை சோதனையிட்டபோது, 27.61 லட்சம் ரூபாய் மதிப்பில், 18.400 கிலோ வெள்ளி கட்டிகள் இருப்பதை அறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில், தெலுங்கானாவில் இருந்து வெள்ளி பொருட்களை செய்வதற்காக, வெள்ளி கட்டிகள் ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.ஈரோடு வணிக வரித்துறை அதிகாரிகளிடம், தர்மலிங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளை ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். வணிக வரித்துறையினர் விசாரித்து, ஜி.எஸ்.டி., விதிப்படி, தர்மலிங்கத்துக்கு, 1.65 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.