/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு-ஜோக்பானி இடையே ரயில் சேவை துவக்கம்
/
ஈரோடு-ஜோக்பானி இடையே ரயில் சேவை துவக்கம்
ADDED : செப் 26, 2025 01:15 AM
ஈரோடு, ஈரோடு-ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, பிரதமர் மோடி கடந்த, 15ல் தொடங்கி வைத்தார். நேற்று காலை, 8:10 மணிக்கு மறுமார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து ஜோக்பானிக்கு வாராந்திர ரயில் புறப்பட்டது.
சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சனிக்கிழமை இரவு ஜோக்பானியை அடைகிறது. அங்கிருந்து ஞாயிறு மதியம் கிளம்பி ஈரோட்டை புதன்கிழமை காலை வந்தடைகிறது. இந்த ரயில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்லும்.
ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணிக்கலாம். எட்டு முன்பதிவு பெட்டி, 11 முன்பதிவற்ற பொது பெட்டிகள் உள்ளன. சிசிடிவி கேமரா, பயணியர் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன ஓட்டுநர் அறை உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. ஈரோடு ஸ்டேஷனில் நேற்று ரயில் புறப்படும் முன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் ஆய்வு மேற்கொண்டார். பின் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.