/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனியாமூர் பள்ளி கலவரம் 440 பேர் கோர்ட்டில் ஆஜர்
/
கனியாமூர் பள்ளி கலவரம் 440 பேர் கோர்ட்டில் ஆஜர்
ADDED : செப் 19, 2025 08:15 PM
கள்ளக்குறிச்சி:கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 440 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு ஜூலை 17ல் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. இது தொடர்பாக, 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதில், பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய வழக்கில், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் 11 பெண்கள் உட்பட 615 பேர் மீது வழக்கு பதிந்து, 24,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இதில், 4 பேர் இறந்து விட்டனர்.
இவ்வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. 9 பெண்கள் உட்பட 440 பேர் ஆஜராகினர். 171 பேர் ஆஜராகவில்லை. நீதிபதி ரீனா, விசாரணையை டிச., 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தும், விசாரணையை சின்னசேலம் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டார்.

