/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழப்பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
/
பழப்பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
பழப்பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
பழப்பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : செப் 18, 2025 11:01 PM
கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் பழப்பயிர்கள் சாகுபடி பரப்பினை அதிகரிக்க செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, விதை சான்று, கால்நடைப் பராமரிப்பு ஆகிய துறைகளின் மூலம் திட்ட பணிகளின் விவரம் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் சம்பா வருவத்திற்கான நெல் இருப்பு, உரம் இருப்பு, நடவு விபரங்கள் மற்றும் மத்திய, மாநில அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல் உளுந்துார்பேட்டை உழவர் சந்தை வரத்து நிலவரம் மற்றும் மார்க்கெட் கமிட்டில் நெல், மக்காசோளம் போன்ற விளை பொருட்களின் வரத்து குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் தீர்வு விபரம் மற்றும் நிலுவை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காண வேண்டும். தோாட்டக்கலை துறையின் மூலம் பழப்பயிர்கள் சாகுபடி பரப்பினை கடந்தாண்டை விட இவ்வாண்டு கூடுதலாக அதிகரிக்க செய்திட வேண்டும்.
மாவட்டத்தில் வேளாண் தொடர்பான திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வேளாண்மை இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஜோதிபாசு உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

