ADDED : செப் 18, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து வட்டார வள மையங்களிலும் 1,723 தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.
இதில், எழுத்தறிவு, எண்ணறிவு கற்பித்தல், எழுத்து கூட்டி படிக்க வைத்தல், எழுத வைக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள், எளிமையாக கற்பிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
உளுந்துார்பேட்டை வட்டார வளமையத்தில் நடந்த பயிற்சியை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் குமார் ஆய்வு செய்தார். இதில் சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

