ADDED : ஜன 14, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே பசு மாட்டை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் காமராஜ், 55; விவசாயி. இவரது விளைநிலத்தல் கட்டி வைத்திருந்த பசுமாடு கடந்த 12ம் தேதி திருடு போனது.
இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மாடு திருடிய பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முனியன், 45; என்பவரை கைது செய்தனர்.

