/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்வு பணி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
தேர்வு பணி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 28, 2025 05:42 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, ஏ.கே.டி., பள்ளியில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ள முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். டி.இ.ஓ.,க்கள் ரேணுகோபால், துரைராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பள்ளிசாரா வயது வந்தோர் திட்ட இயக்குநர் நாகராஜ முருகன் பேசினார்.
அதில், தேர்வுக்கு வரும் மாணவர்களை நன்றாக பரிசோதித்த பிறகு தேர்வறைக்குள் அனுப்ப வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. தேர்வு நேரம் முடிந்ததும் விடைத்தாள்களை சேகரித்திட வேண்டும். எவ்வித புகாருமின்றி தேர்வு நடத்திட வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டன. இதில், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.