/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை
/
தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : மார் 26, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான தாய் மற்றும் மகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி விஜயலட்சுமி,49; கடந்த ஓராண்டிற்கு முன் குடும்ப பிரச்னை காரணமாக, விஜயலட்சுமி கணவரை பிரிந்தார்.
தொடர்ந்து, ரங்கநாதபுரத்தில் மகள் ஆனந்தி, 29; உடன் வசித்து வந்தார்.
கடந்த, 24 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற தாய், மகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.
ராமச்சந்திரன் புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.