/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய இடத்தில் அமைத்த கம்பி வேலி அகற்றம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய இடத்தில் அமைத்த கம்பி வேலி அகற்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய இடத்தில் அமைத்த கம்பி வேலி அகற்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய இடத்தில் அமைத்த கம்பி வேலி அகற்றம்
ADDED : மார் 26, 2025 05:00 AM

திருக்கோவிலுார் : மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டா பகுதியில், தனிநபர் அமைத்த வேலியை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், 36 மாற்றுத்திறனாளிகளுக்கு அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள புறம்போக்கு இடத்தில் தலா ஒன்றரை சென்ட் வீதம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
இந்த இடத்தில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கீற்றுக் கொட்டகை அமைத்தனர். அப்பகுதியை அனுபவித்து வந்த தனிநபர் கொட்டகையை பிரித்துவிட்டு கம்பி வேலி அமைத்தார்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள், அரகண்டநல்லுார் போலீசில் புகார் கொடுத்தனர்.
விசாரணையில், அந்த இடம் தங்கள் அனுபவத்திலிருந்து வருவதால், உரிமை கோரி ஏழுமலை என்பவர் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில், கம்பி வேலி அமைத்திருப்பதை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த போவதாக மாற்றுத்திறனாளிகள் அறிவித்தனர்.
இதையடுத்து, கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து தலைமையில், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத் மற்றும் போலீசார் கம்பி வேலியை அகற்றினர்.
தொடர்ந்து நில அளவைத் துறை மற்றும் வருவாய் துறையினர் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.