ADDED : மே 10, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் தினகர்பாபு வரவேற்றார். உதவியாளர் பிரபாகரன் தீர்மானம் வாசித்தார்.
கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், அலுவலக கணக்காளர் முத்துசாமி மற்றும் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.