ADDED : மார் 25, 2025 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயகன்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நுாற்றாண்டு விழா, ஊராட்சி தலைவர் ரீட்டா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமரவேல் தலைமையில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பன்னீர்செல்வம், சிதம்பரம், வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை கவுரி ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், ஒன்றிய குழு சேர்மன் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.