/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிக்கு வரும் குடிநீர் குழாயில் இரண்டு இடங்களில் உடைப்பு
/
காஞ்சிக்கு வரும் குடிநீர் குழாயில் இரண்டு இடங்களில் உடைப்பு
காஞ்சிக்கு வரும் குடிநீர் குழாயில் இரண்டு இடங்களில் உடைப்பு
காஞ்சிக்கு வரும் குடிநீர் குழாயில் இரண்டு இடங்களில் உடைப்பு
ADDED : ஜூன் 25, 2025 08:31 PM
காஞ்சிபுரம்:திருப்பாற்கடலில் இருந்து காஞ்சிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, சீரமைப்பு பணியை சரி செய்ய அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள 2.7 லட்சம் பேருக்கு, அன்றாடம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, மூல ஆதாரமாக, காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்றில் இருந்தும், ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் பகுதி பாலாற்றில் இருந்தும் குழாய் வாயிலாக குடிநீர் பெறப்படுகிறது.
மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு, 3.1 கோடி லிட்டர் குடிநீர் அன்றாடம் தேவைப்படுகிறது. ஆனால், 2.3 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது.
இதனால், தனி நபருக்கு 135 லிட்டருக்கு பதிலாக 100 லிட்டருக்கும் குறைவாகவே, மாநகராட்சியால் குடிநீர் வழங்க முடிகிறது. குடிநீர் சப்ளை குறைவாக உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியிலிருந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு வரக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சப்ளை சில நாட்களாக குறைந்துள்ளது.
எங்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது என, மாநகராட்சி பொறியாளர்கள் கண்டறிந்ததில், ராணிப்பேட்டை மாவட்டம், களத்துார் கிராமத்தில் செல்லும் குழாயில் நான்கு இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர், களத்துார் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
உடைந்த குழாயை உடனடியாக சரி செய்ய மேயர் மகாலட்சுமி அறிவுறுத்தினார். உடைப்பு சரி செய்யும் பணிகள் மூன்று நாட்களாக நடந்து வரும் நிலையில், இரு இடங்களில் உடைப்பு சரி செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் இரு இடங்களில் சரி செய்யும் பணிகள் நடப்பதாக மேயர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.