/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிமென்ட் கல் சாலை சீரமைக்கப்படுமா?
/
சிமென்ட் கல் சாலை சீரமைக்கப்படுமா?
ADDED : மார் 26, 2025 12:35 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், 37,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, கொல்லமேடு சாலை சேதமடைந்து இருந்தது.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, இரு ஆண்டுக்கு முன், சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், சிமென்ட் கல்கள் பெயர்ந்து உள்ளன.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பெயர்ந்து உள்ள கற்களில் சிக்கி, விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இச்சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த சிமென்ட் கல் சாலையை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.