/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மானிய கோரிக்கை அறிவிப்பில் காஞ்சிபுரம் புறக்கணிப்பு முக்கிய திட்டங்கள் எதுவும் இல்லை
/
மானிய கோரிக்கை அறிவிப்பில் காஞ்சிபுரம் புறக்கணிப்பு முக்கிய திட்டங்கள் எதுவும் இல்லை
மானிய கோரிக்கை அறிவிப்பில் காஞ்சிபுரம் புறக்கணிப்பு முக்கிய திட்டங்கள் எதுவும் இல்லை
மானிய கோரிக்கை அறிவிப்பில் காஞ்சிபுரம் புறக்கணிப்பு முக்கிய திட்டங்கள் எதுவும் இல்லை
ADDED : மார் 25, 2025 09:52 PM
காஞ்சிபுரம்,:தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, துறை வாரியாக மானிய கோரிக்கை அறிவிப்புகளை, அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அமைச்சர் நேரு சட்டசபையில் நேற்று, தன் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில், தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பபட்டுள்ளன.
பூங்கா, சாலை, கட்டடம், பாதாள சாக்கடை, குடிநீர் என பல வகையான அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு என, பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் இந்த அறிவிப்பில் இல்லாதது, காஞ்சிபுரம் நகரவாசிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மானிய கோரிக்கை அறிவிப்புகளில், 13வது அறிவிப்பாக, காஞ்சிபுரத்தில் உள்ள எரிவாயு தகன மேடையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு என, முக்கிய அறிவிப்புகள் ஏதும் இல்லை.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற வேண்டிய தேவை பல உள்ளன. அதில், ஒன்று கூட அறிவிப்பில் வராதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மல்டி லெவல் பார்க்கிங் வசதி, அல்லாபாத் ஏரி சீரமைப்பு, ஓ.பி.,குளம் படகு குழாம் அமைத்தல், வணிக வளாகம் கட்டுதல், சமுதாய கூடங்கள் கட்டுவது என, பல்வேறு தேவைகள் இன்றைக்கும் உள்ளன.
ஆனால், முக்கிய அறிவிப்புகளை வெளியிடாமல், காஞ்சிபுரம் மாநகராட்சியை புறக்கணித்துவிட்டதாக நகரவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.