/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வாழ்வியல் பயிற்சி பட்டறை
/
காஞ்சியில் வாழ்வியல் பயிற்சி பட்டறை
ADDED : ஜன 09, 2024 08:38 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ- - மாணவியருக்கு நிலையான வாழ்வியல் பயிற்சி பட்டறை காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பயிற்சியை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், பயிற்சியில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு மஞ்சப்பை வழங்கினார்.
இதில், மாணவ- - மாணவியருக்கு விதைப்பந்து, காகிதப்பை தயாரிப்பு, காளான் வளர்ப்பு குறித்தும், அஞ்சறை பெட்டியும், ஆரோக்கியமும் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வில்லியம் விஜயராஜ், திருவள்ளூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.

