/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடு மேய்த்த மூதாட்டியிடம் 1 பவுன் தாலி பறித்தவர் கைது
/
ஆடு மேய்த்த மூதாட்டியிடம் 1 பவுன் தாலி பறித்தவர் கைது
ஆடு மேய்த்த மூதாட்டியிடம் 1 பவுன் தாலி பறித்தவர் கைது
ஆடு மேய்த்த மூதாட்டியிடம் 1 பவுன் தாலி பறித்தவர் கைது
ADDED : ஜூன் 25, 2025 02:30 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மேலதாளியாம்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் மனைவி லட்சுமி, 60; இவர், கடந்த, 22 மதியம், 1:00 மணிக்கு, சீகம்பட்டி-தாளியாம்பட்டி சாலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், மங்கி குல்லா அணிந்து வந்து மூதாட்டி லட்சுமியை தாக்கி, அவரது கழுத்தில் இருந்த, ஒரு பவுன் தாலியை பறிக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த லட்சுமி சத்தமிட்டுள்ளார். உடனே மர்ம நபர் துணியை எடுத்து மூதாட்டியின் வாயில் பொத்தி, தாலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைத்ததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் அங்கேயே கிடந்துள்ளார். மாலை, 4:00 மணிக்கு, மேலதாளியாம்பட்டியை சேர்ந்த வடிவேல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்துள்ளார். அப்போது மூதாட்டி லட்சுமியை மீட்டுள்ளார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில், மேல தாளியாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன், 22, என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, ஒரு பவுன் தாலியை மீட்டன். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.