/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 25, 2025 02:29 AM
கரூர், 'ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்திற்கு, வரும், 27க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், நெய்தலுார் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, கே.பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம், பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற நபர்கள் கல்வித்தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ, வரும், 27க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கரூர் கலெக்டர் அலுவலகம், முதல் தளம், அறை எண்.114, கரூர்-639007 என்ற முகவரிக்கு அனுப்புலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.