/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் இடத்தில் சுகாதார சீர்கேடு குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கல்
/
கோவில் இடத்தில் சுகாதார சீர்கேடு குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கல்
கோவில் இடத்தில் சுகாதார சீர்கேடு குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கல்
கோவில் இடத்தில் சுகாதார சீர்கேடு குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கல்
ADDED : ஜூன் 24, 2025 12:59 AM
கரூர், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகிறோம் என, கரூர் மாவட்டம், மாயனுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காயத்திரி, கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: மாயனுார், மாரியம்மன் கோவில் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார
சீர்கேடு ஏற்பட்டு இதனால், கொசு உற்பத்தி அதிகமாகி, இரவு நேரத்தில் வீடுகளில் துாங்க முடியவில்லை. நாள் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த இடத்தில் குவிந்த குப்பை அகற்றாமல் எரிப்பதால், வீடுகளில் உள்ள முதியவர்கள், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். இது குறித்து பஞ்., நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குப்பையை அகற்ற நடவடிக்கை தேவை.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.