/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு

ADDED : ஜூன் 23, 2025 05:48 AM
கரூர்: 'கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு, மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகி-றது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில், சமூகத்தில் பின்-தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோருக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்-ளது. மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 10,000 ரூபாய்- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்-கும்போது, மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது அதிக-பட்சம், 5,000 ரூபாய்- மானிய தொகையாக வழங்கப்படும்.
இதற்கு, தமிழகத்தில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்ப-தற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு, 1.20 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்-ணப்பங்களை, ஜூலை, 14க்குள், மாவட்ட சமூகநல அலுவ-லகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கரூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.