/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி கறுப்பு பேட்ச் அணிந்த ஆசிரியர்கள்

ADDED : மார் 26, 2025 01:39 AM
பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி கறுப்பு பேட்ச் அணிந்த ஆசிரியர்கள்
கிருஷ்ணகிரி:ஆசிரியர்கள் மீது பொய் புகார் அளிக்கப்படுவதாகவும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில், ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணியாற்றினர்.
இது குறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க, மாவட்ட தலைவர் சிவா கூறியதாவது: சமீப காலமாக தமிழகத்தில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படும் பொய் புகாரால், ஆசிரியர்கள் பாதிக்கின்றனர். அவர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கறுப்பு பேட்ச் அணிந்து போராட்டம் நடத்தினோம். பிளஸ் 2 தேர்வு நடந்த, 87 மையங்களில் பணிபுரிந்த, 1,567 ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜூடன் தேர்வு பணியாற்றினர்.
தேர்வு மையங்கள் அல்லாத பள்ளிகளிலும், 2,000 ஆசிரியர்கள் உட்பட மாவட்டம் முழுவதும், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டம்
நடத்தப்பட்டது.