/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட்கடும் வெயிலால் 'வெறிச்'
/
போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட்கடும் வெயிலால் 'வெறிச்'
ADDED : மார் 26, 2025 01:39 AM
போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட்கடும் வெயிலால் 'வெறிச்'
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு, சுற்று வட்டார பகுதிகளிலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், அன்றாட தேவைகள் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல, அதேபோல் சிப்காட்டிற்கு பணிக்கு செல்லும், 1,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் என பலரும், தினமும் வந்து செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக பகலில் கடும் வெப்ப தாக்கத்தினால், பொதுமக்கள் காலை, 6:00 முதல், 9:00 மணி வரையும், அதேபோல் மாலை, 5:00 முதல், 6:00 மணி வரையிலான நேரங்களில் மட்டும், குடும்ப தேவைகளுக்கு வெளியூர் செல்வது, அதேபோல் பொருட்களை வாங்குவது போன்ற பணிகளுக்கு வந்து செல்கின்றனர். வேறு வழியின்றி ஒரு சிலர் கடும் வெயிலின் தாக்கத்திலும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டதால், வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள், வியாபாரமின்றி விரக்தியில் இருந்தனர்.