/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'என் குப்பை, என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'என் குப்பை, என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
'என் குப்பை, என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
'என் குப்பை, என் பொறுப்பு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 24, 2024 07:27 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட கே.தியேட்டர் ரோடு, ஆனந்த் தியேட்டர் ரோடு சந்திப்புகளில், 'என் குப்பை, என் பொறுப்பு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து, வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், கடைகளில் உருவாகும் மட்கும், மட்காத குப்பையை நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்களை அறிவுறுத்தினர். நகர் நல அலுவலர் விஜயகுமார், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் அங்கமுத்து, மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.