/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வழக்கு பதியாமல் அலைக்கழித்த போலீசார் தீக்குளிக்க முயற்சித்த இருவர் மீது வழக்கு

ADDED : ஜூன் 23, 2024 09:47 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஒசட்டியை சேர்ந்த மாதப்பா மனைவி ஜெயம்மா, 65; கூலித்தொழிலாளி. இவர், நேதாஜி ரோட்டை சேர்ந்த நகை பாலீஸ் போடும் கார்த்திக், 39, என்பவரிடம் தன், 8 சவரன் நகையை கொடுத்து, அடகு வைத்து கிடைக்கும் பணத்தில் வீடு கட்டி தருமாறு கேட்டார்.
கார்த்திக் நகையை அடகு வைத்து, வீடு கட்டி கொடுத்தார். பின், நகையை மீட்க, 2 லட்சம் ரூபாயை ஜெயம்மா, கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி சென்ற அவர், நகையை மீட்காமல், மூன்று ஆண்டுகளாக ஏமாற்றி வந்தார்.
புகார் செய்ய, தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனுக்கு மூதாட்டி ஜெயம்மா பல மாதமாக நடந்தும், போலீசார் வழக்கு பதியாமல் அலைக்கழித்தனர்.
நேற்று முன்தினம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் முன், ஜெயம்மா தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார், கார்த்திக் மீதும், தீக்குளிக்க முயற்சித்த ஜெயம்மா மீதும் வழக்குப்பதிந்தனர்.
அதேபோல், கெலமங்கலம் அருகே மஞ்சள கிரியை சேர்ந்த ஆனந்தன், 28, நிலப்பிரச்னை தொடர்பாக புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., அலுவலகம் முன் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார், அவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.