/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனமுனி ஐயனார் கோவில் திருவிழா பச்சை ஆடை உடுத்தி, ஆடு பலி
/
வனமுனி ஐயனார் கோவில் திருவிழா பச்சை ஆடை உடுத்தி, ஆடு பலி
வனமுனி ஐயனார் கோவில் திருவிழா பச்சை ஆடை உடுத்தி, ஆடு பலி
வனமுனி ஐயனார் கோவில் திருவிழா பச்சை ஆடை உடுத்தி, ஆடு பலி
ADDED : ஜூன் 22, 2024 02:47 AM
கிருஷ்ணகிரி:பர்கூர், வனமுனி ஐயனார் கோவில் திருவிழாவில், பச்சை ஆடை உடுத்தி, ஆட்டை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் கொல்லப்பள்ளி இருளர் காலனி அருகில் உள்ள பெரியமலை என்னும் வனத்தில் அமைந்துள்ள, வனமுனி ஐயனார் கோவில் திருவிழா கடந்த, 6ல், கங்கனம் கட்டுதல், மாலை அணிவித்தல், விரதம் ஆரம்பித்து, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று, வனதேவதை அம்மன் வனமுனி ஐயனாருக்கு சீர்வரிசையை, சம்மந்தி வீட்டாரிடம் ஒப்படைத்தல், இருளர் குட்டையில் இருகரகங்கள் தலை கூடுதல் நிகழ்ச்சியுடன், வனதேவதை அம்மன் மற்றும் வனமுனி ஐயனாரை வணங்கினர்.
அனைவரும் பச்சை ஆடை உடுத்தி, ஏராளமான ஆட்டை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். சுவாமி வந்த பக்தர்கள் பலியிட்ட ஆட்டின் ரத்தத்தை குடித்தனர். வேண்டிக் கொண்டு தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது, பூசாரி நடந்து சென்று ஆசி வழங்கினார். இன்று காலை, இரு கரகமும் கங்கையில் விடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் கடந்த காலம் முதல், தேங்காய், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, வாழைப்பழம் ஆகியவையும், பிளாஸ்டிக் கவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.