/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதலீடுக்கு அதிக லாபம் என ஆசை வார்த்தை கூறி விவசாயியிடம் ரூ.5.22 லட்சம் மோசடி

ADDED : ஜூன் 22, 2024 01:17 AM
கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி விவசாயியிடம், ஸ்டாக் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, 5.22 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சின்ன ஆல்ரஹள்ளியை சேர்ந்தவர் வீரமணி, 31, விவசாயி.
இவரது பேஸ்புக் பக்கத்தில் கடந்த பிப்.,20ல், ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட நிறுவனத்தில் ஸ்டாக் டிரேடிங் செய்தால், முதலீட்டுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என இருந்தது. மேலும், சில இணையதள லிங்க்குகளும் அனுப்பப்பட்டிருந்தன. அதை நம்பி லிங்க்கை கிளிக் செய்து, சிறிதளவு பணம் முதலீடு செய்த வீரமணிக்கு குறிப்பிட்ட லாபம் கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 5 லட்சத்து, 22 ஆயிரத்து, 440 ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, ஆறு தவணைகளாக அனுப்பினார். அதன்பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. வீரமணி முதலீடு செய்த இணையதள பக்கங்களும் முடங்கின.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீரமணி, இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.