/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா.திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தோர் அரசு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
மா.திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தோர் அரசு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மா.திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தோர் அரசு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மா.திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தோர் அரசு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும், ஆக., 15ல் நடக்கும் சுதந்திர தினவிழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனங்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும்
சான்றிதழ் வழங்க உள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்களை, https://awards.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் வரும், 30க்குள் விண்ணப்பித்து, அதன் இரண்டு நகல்களை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.23ல் இயங்கி வரும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.