/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இ.கம்யூ., கட்சி 27வது நகர மாநாடு
/
இ.கம்யூ., கட்சி 27வது நகர மாநாடு
ADDED : ஜூன் 25, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், இ.கம்யூ., கட்சியின், 27வது ஒன்றிய, நகர மாநாடு நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமைய்யா, மாநாட்டு கொடியை ஏற்றினார். நகர செயலாளர் உபேத் வரவேற்றார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட தலைவர் சிவராஜி தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.யூ.சி., மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன், துவக்கவுரை ஆற்றினார். இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நிறைவுரை ஆற்றினார்.கூட்டத்தில், மாங்கனிக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட 'மா' விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 50,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். 'மா' சாகுபடி உள்ள இடங்களில், அரசு குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.