நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானைகள் அட்டகாசம் செய்து வருகிரது. தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிளாலம், என்.குத்துார் கிராமங்களில் இரண்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து ராகி, தக்காளியை தின்றும் மிதித்தும் மற்றும் பயிரிடப்பட்டுள்ள பூக்களையும் நாசமாக்கி சென்றன.
யானைகள் தொடர் அட்டகாசத்தை தடுக்க, வனத்துறையினர் திணறி வருவதாகவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமெனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.