/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜி.ஹெச்.,ஐ சுத்தம் செய்த என்.எஸ்.எஸ்., மாணவியர்
/
ஜி.ஹெச்.,ஐ சுத்தம் செய்த என்.எஸ்.எஸ்., மாணவியர்
ADDED : செப் 26, 2025 01:35 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அதியமான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி நாட்டு நலப் பணி திட்ட மாணவியர், துாய்மை சேவை இயக்கத்தின் மூலம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் துாய்மை பணியில் நேற்று ஈடுபட்டனர். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
செவிலியர் கண்காணிப்பாளர் விஜயா முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனையில் குப்பைகளை சேகரித்து துாய்மை இந்தியா திட்டத்தின் மூலம், மாணவர்கள் துாய்மை பணி செய்தனர். இதில், அதியமான் மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ருக்குமணி, யூத் ரெட் கிராஸ் அலுவலர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.