/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 26, 2025 01:34 AM
ஊத்தங்கரை 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை முழுவதுமாக புறக்கணிப்பதாக கூறி, வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை முழுவதுமாக புறக்கணிப்பதாக கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு துணை தாசில்தார் கருணாகரன் தலைமை வகித்தார். வருவாய்துறையினர், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 3:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையிலான காத்திருப்பு போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.* பர்கூர் தாசில்தார் அலுவலகம் முன் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பர்கூர் ஒன்றிய செயலாளர் அல்லா பாஷா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, பர்கூர் வி.ஏ.ஓ., வட்டத்தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வி.ஏ.ஓ.,க்கள். நில அளவையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பல்வேறு வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.