/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
/
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
ADDED : செப் 12, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 9 மற்றும், 10 தேதிகளில் இரவில் கனமழை பெய்தது. இதில், கிருஷ்ணகிரி நகராட்சியில் இணைக்கப்பட்ட சத்யசாய் நகர், அருகிலுள்ள பெத்ததாளப்பள்ளி, பெத்தனப்பள்ளி பஞ்.,களின் பல பகுதி
களில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் பஞ்., நிர்வாகம் மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் குடிநீர் வழங்கவில்லை. பல்வேறு அலுவலகங்களில் புகார் மனு அளித்தும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் சில பகுதிகளில், உங்கள் லேஅவுட்டுகளை பி.டி.ஓ.,விடம் சமர்ப்பிக்கவில்லை. அதனால் சாலைகள், சாக்கடை கால்வாய் அமைக்க முடியவில்லை என்கின்றனர். ஆனால், பஞ்., நிர்வாகிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பஞ்.,களில், நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியிலும், இந்த அவலம் தொடர்கிறது.
தேங்கியுள்ள நீரில் விஷ ஜந்துகள் உள்ளன. பல இடங்களில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.