/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்துார் ஜி.ஹெச்.,ல் பணியில் இல்லாத டாக்டர்களால் அவதி
/
மத்துார் ஜி.ஹெச்.,ல் பணியில் இல்லாத டாக்டர்களால் அவதி
மத்துார் ஜி.ஹெச்.,ல் பணியில் இல்லாத டாக்டர்களால் அவதி
மத்துார் ஜி.ஹெச்.,ல் பணியில் இல்லாத டாக்டர்களால் அவதி
ADDED : ஜூன் 25, 2025 01:32 AM
மத்துார், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஜி.ஹெச்.,ல் அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் 30 படுக்கையுடன் கூடிய உள் நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்ட, அனைத்து வகையான சிகிச்சை அளிக்கும் வகையில், தனித்தனி பிரிவுகள் உள்ளன. ஆனால் காலை, 8:00 முதல், மாலை, 4:00 மணி வரை மட்டும், டாக்டர்கள் பணியில் உள்ளனர்.
கடந்த, 3 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்கிறது. மத்துார் சுற்று வட்டாரத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள், இங்கு பிரசவம், விஷக்கடியினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கிருஷ்ணகிரி - -திண்டிவனம், தேசிய நெடுஞ்சாலை, திருப்பத்துார் - -தர்மபுரி மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகளில் சிக்குவோர் அவசர சிகிச்சைக்கு இங்கு வரும் நேரத்தில், அங்கு பணியிலுள்ள செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர்.
பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு, 2, 3 பேருக்கு மேல் சிகிச்சைக்கு வரும்போது, மருத்துவம் படிக்காதோரும், முதலுதவி சிகிச்சை அளிக்கும் நிலை அடிக்கடி நடக்கிறது. இது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மத்துார் ஜி.ஹெச்.,க்கு இரவு நேர பணியில் டாக்டர்களை நியமித்து, விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சையளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.