ADDED : அக் 12, 2025 05:10 AM
மதுரை : மதுரை உட்பட தென்மாவட்ட விவசாயத்திற்காக 3900 டன் யூரியா உரம் ரயில் மூலம் பெறப்பட்டதாக மதுரை வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தற்போது சாகுபடி செய்துள்ள நெல், மக்காச்சோளம், தோட்டக்கலை பயிர்களுக்குத் தேவையான யூரியா 1678 டன், டி.ஏ.பி., 678 டன், பொட்டாஸ் 895 டன், காம்ப்ளக்ஸ் 4390 டன் இருப்பு உள்ளது.
என்.எப்.எல்., கிரிப்கோ, இப்கோ நிறுவனங்கள் யூரியாவை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள் மூலம் 3900 டன் யூரியா ரயில் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு 710 டன், தனியார் உர நிறுவனங்களுக்கு 1070 டன், மீதி உரங்கள் தென் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.
பயிர் சாகுபடி பரப்பிற்கு ஏற்றவாறு ஆதார் அட்டை மூலம் விவசாயிகள் உரம் வாங்கலாம். மேலும் மதுரை 'டான்பெட்' கோடவுனில் 300 டன் யூரியா கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

