sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெண் கொலையில் துாக்கு தண்டனை இயற்கை மரணம் வரை சிறை தண்டனையாக மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

/

பெண் கொலையில் துாக்கு தண்டனை இயற்கை மரணம் வரை சிறை தண்டனையாக மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் கொலையில் துாக்கு தண்டனை இயற்கை மரணம் வரை சிறை தண்டனையாக மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் கொலையில் துாக்கு தண்டனை இயற்கை மரணம் வரை சிறை தண்டனையாக மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : அக் 12, 2025 05:10 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்ணை கொலை செய்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, இயற்கை மரணம் அடையும்வரை ஆயுட்கால சிறை தண்டனையாக மாற்றியமைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகர் சிவகாமி. மின்வாரிய ஊழியர். இவரது மகள் லோகப்பிரியா20. இவர்களது உறவினர் திருமயம் அருகே பெருந்துறையை சேர்ந்தலட்சுமணன் (எ) சுரேஷ்32. இவர் பிறரிடம் வாங்கிய கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக்கூறி அடிக்கடி சிவகாமியிடம் பணம் கேட்டார். சிவகாமி மறுத்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 2021 ஏப்.27ல் காலை 10:15 மணிக்கு லோகப்பிரியா தனது தாயை டூவீலரில் அசோக் நகர் பஸ்ஸ்டாண்டில் இறக்கிவிட்டார். பின் வீட்டிற்கு வந்தார். அங்கு லட்சுமணன் வந்துள்ளதாக தாயிடம் அலைபேசியில் லோகப்பிரியா தெரிவித்தார்.

சிவகாமி, 'அவர் பணம் கேட்டு நம்மை தொந்தரவு செய்வார்; அவரை ஏன் வீட்டிற்குள் அனுமதித்தாய்,' என்றார். லோகப்பிரியாவை கொலை செய்துதங்கச் சங்கிலி, அலைபேசியை பறித்துவிட்டு, டூவீலரை லட்சுமணன் திருடிச் சென்றார். கணேஷ்நகர் போலீசார்கொலை வழக்கு பதிந்தனர்.

அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏப்.12 ல் துாக்கு தண்டனை விதித்தது. அந்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்வதற்காக ஆவணங்களை உயர்நீதிமன்றக் கிளைக்கு அனுப்பி வைத்தது. தண்டனையை ரத்து செய்யக்கோரி லட்சுமணன் தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம்: சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இது சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார்: சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு மரண தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கும் 'அரிதிலும் அரிதான வழக்கு,' வகையின் கீழ் வரவில்லை. மரண தண்டனையை இயற்கை மரணம்வரை ஆயுள் தண்டனையாக மாற்றலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உச்சநீதிமன்றம் வகுத்துள்ள கொள்கை அடிப்படையில் இவ்வழக்கு அரிதிலும் அரிதான வழக்குகளின் வரம்பைத் தாண்டவில்லை. இவ்வழக்கு மரண தண்டனை விதிப்பதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை.

சாட்சியங்களின் தன்மை மற்றும் சம்பவம் நடந்த பிறகு மனுதாரரின் நடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய 'அரிதிலும் அரிதான' வகையின் கீழ் வரும் வழக்கு அல்ல.

மனுதாரரால் சமூகத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது; அவரை சீர்திருத்துவது சாத்தியமில்லை என்பதை காண்பிக்க எந்தப் பதிவும் இல்லை. மனுதாரரின் இயல்பான வாழ்க்கையின் எஞ்சிய காலம்வரை மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையாக மாற்றுவதன் மூலம் நீதியின் நோக்கம் நிறைவேறும்.மரண தண்டனையை இயற்கை மரணம் அடையும்வரை ஆயுட்கால சிறை தண்டனையாக மாற்றியமைக்கிறோம்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us