/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கதவு இல்லாத கால்வாய்: கண்டுக்காத நீர்வளத்துறை
/
கதவு இல்லாத கால்வாய்: கண்டுக்காத நீர்வளத்துறை
ADDED : பிப் 02, 2024 06:14 AM

மேலுார்: பெரியாறு நீட்டிப்பு கால்வாயிலிருந்து பிரிவு கால்வாய்களுக்கு கதவு அமைக்க மறுப்பதாக நீர்வளத்துறை மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
புலிப்பட்டியில் இருந்து பெரியாறு நீட்டிப்பு கால்வாய் 23 கி.மீ., துாரம் செல்கிறது. இதனால் 21 ஆயிரத்து 603 ஏக்கர் பாசனம் பெறும்.
இக்கால்வாய்களில் இருந்து கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் பிரிவு கால்வாய்களுக்கு கதவு கிடையாது.
நெற் பயிர் விவசாயத்திற்கு தண்ணிரை பாய்ச்சலும், காய்ச்சலும் என்ற முறையில் செய்ய வேண்டும் என்பது விதி.
இல்லையெனில் பயிர்கள் அழுகி விடும். ஆனால் கால்வாய்களுக்கு கதவு இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
விவசாயி சிதம்பரம்: பத்துக்கும் மேற்பட்ட கால்வாய்களுக்கு கதவு கிடையாது.
தனால் தேவையான நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், தேவையற்ற நிலங்களுக்கு தண்ணீரை அடைக்க முடியாததால் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் எல்லா பகுதிகளிலும் வீணாவதால் கடைமடை விவசாயிகளுக்கு சென்றடையவில்லை.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

