ADDED : ஜூன் 15, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் மேலக்கால் பாலம் அருகே திருவேடகம் - தேனுார் ரோட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
கடந்தாண்டு அம்ருத் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் பதிக்கும் பணி நடந்தது. அதற்காக தோண்டிய ரோடு சீரமைக்கப்படாமல் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
ஜல்லிக் கற்கள், செம்மண் நிறைந்து மேடு பள்ளமாக உள்ளது.
இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஜல்லிக் கற்களால் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் ரோடு சேதம் அடைந்துள்ளது தெரியாமல் இரவு நேரத்தில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
விபரீதம் விளையும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.