/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிப்பறையை கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைத்துறை

ADDED : ஜூன் 15, 2025 06:43 AM

மேலுார் : ''மேலுார்- திருப்பத்துார் மாநில நெடுஞ்சாலையை அமைத்து 7 ஆண்டுகள் அடிப்படை வசதிகளை பராமரிக்க ஒப்பந்தம் செய்தவர்கள் எவ்வித வசதியும் செய்து தரவில்லை'' என தனியார் நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது.
கடந்த 2023 ல் இம் மாநில நெடுஞ்சாலை ஆசிய வளர்ச்சி வங்கி நிதி ரூ. 119 கோடியில் புதிய பாலம், ரோட்டின் தரம் மேம்படுத்தி அமைக்கப்பட்டது.
நெடுஞ்சாலையில் உள்ள செம்மினி பட்டி, கொங்கம்பட்டி, கீழவளவு, கீழையூர் கிராமங்களில் கழிப்பறை வசதி, பஸ்ஸ்டாப் அமைத்து 7 ஆண்டுகள் பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் கழிப்பறைகளை ஒப்பந்ததாரர் கண்டு கொள்ளவில்லை.
சமூக ஆர்வலர் தர்மலிங்கம் கூறியதாவது : பஸ் ஸ்டாப் அருகே இருபாலருக்கும் கழிப்பறைகள் கட்டியதோடு சரி. தண்ணீர் வசதி வழங்கி பராமரிக்கவில்லை. இதனால் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துவோர் முகம் சுளிக்கும் அளவு துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறை புதர் மண்டியும், கதவுகள் உடைந்தும் கிடக்கின்றன. இரண்டரை ஆண்டுகள்கூட பராமரிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி ஒப்பந்ததாரர்களிடம் கறாராக கூற வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ''கழிப்பறைகள் விரைவில் சரி செய்யப்படும்'' என்றனர்.