நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மதுரை எஸ்.பி.ஐ., குழும நிர்வாக இயக்குனர்கள் சக்தி சரவணன், சிவப்பிரியா தலைமை வகித்தனர். இல்ல செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடை வழங்கப்பட்டது. இல்ல காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

