/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வுஅதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட கலெக்டர்

ADDED : மார் 26, 2025 02:18 AM
இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வுஅதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்ட கலெக்டர்
திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், ஐந்தாண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் வறுமைகோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு முதல் கட்டமாக, 1,189 இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு நகராட்சியில், வறுமை கோட்டுக்கு கீழுள்ள, 252 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, திருச்செங்கோடு நகராட்சி, 25-வது வார்டில், நேற்று கலெக்டர் உமா, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வேட்டப்பாறை என்ற இடத்தில் ஒவ்வொரு வீடாக சென்று குடும்ப அட்டை, ஆதார் கார்டு, காஸ் புக் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். மேலும், வீட்டில் எத்தனை பேர் உள்ளனர். எத்தனை நாட்களாக குடியிருக்கின்றனர் என, விசாரித்தார்.
அப்போது, பல வீடுகளில் மக்கள் இல்லாமல், வீடு பூட்டி கிடந்தது. குடியிருக்கும் அடையாளம் சிறிதும் இல்லாமல் இருந்தது. இதனால் கடுப்பான கலெக்டர் உமா, தாசில்தார், வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டீர்களா? இல்லையா? பெரும்பாலான வீடுகளில் மக்கள் குடியிருக்கவே இல்லை. இந்த முகவரியில் இல்லாதவர்களுக்கு, எப்படி பட்டா வழங்க முடியும். இதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை என, கோபப்பட்டார். அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
மேலும், ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டாரா இல்லையா என, தாசில்தாரிடம் கேட்டார். அனைவரையுமே சஸ்பெண்ட் தான் செய்ய வேண்டும். 'கலெக்டர்னா கார்ல வந்து இறங்கி, ரோட்டுல நின்னு பார்த்துட்டு போவேன்னு நினைச்சீங்களா' என, அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.