/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருப்பு சட்டை அணிந்துரேஷன் ஊழியர்கள் பணி
/
கருப்பு சட்டை அணிந்துரேஷன் ஊழியர்கள் பணி
ADDED : மார் 26, 2025 02:18 AM
கருப்பு சட்டை அணிந்துரேஷன் ஊழியர்கள் பணி
ராசிபுரம்:தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். இச்சங்கம் சார்பில், பல்வேறு துறைகளின் கீழ் இயங்க கூடிய ரேஷன் கடைகளை, ஒரு துறையின் கீழ் கொண்டு வந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். விற்பனை கருவியுடன், எடை தராசை இணைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் ரேஷன் கடைக்கு, குடோனில் இருந்து எடை குறைவாக வரும் பொருட்கள் குறித்து தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களது எதிர்ப்பை பதிவு செய்யவும் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், ராசிபுரம் பகுதியில் நேற்று கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து ரேஷன் கடையில் பொருட்களை வினியோகம் செய்தனர்.
இதுகுறித்து, மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன் கூறுகையில், ''இந்த தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று (நேற்று)தொடங்கியுள்ளது. ஏப்., 2 வரை கருப்பு சட்டை மற்றும் பேட்ச் அணிந்து பணியாற்ற உள்ளோம்,'' என்றார்.