/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 26, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி
சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், வருவாய்த்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஸ்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி வழியாக பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. இதில், கலந்துகொண்ட கல்லுாரி மாணவ, மாணவியர் போதைப்பொருள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஆர்.ஐ., பிரகாஷ், வி.ஏ.ஓ., அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.