/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீர் கேட்டு காலிக்குடத்துடன் மனு
/
தண்ணீர் கேட்டு காலிக்குடத்துடன் மனு
ADDED : ஜூன் 24, 2025 01:59 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதிக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி உள்ளூர் நீராதாரம் மூலம் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. தற்போது, புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்காக டவுன் பஞ்.,ல் ஜே.ஜே.நகர், கடைவீதி, உள்ளிட்ட பகுதிகளில் புதிய பைப்புகள் அமைத்து வால்வுடன் கூடிய இணைப்பும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளக்கல்பட்டி பகுதியில் ஒரு மாதமாகியும் குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் டவுன் பஞ்., அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர்கள், விரைவில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.