/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
/
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 24, 2025 01:59 AM
குமாரபாளையம், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், பழைய சார்பதிவாளர் அலுவலக வீதி உள்ளது. இந்த வீதி வழியாக ராஜா வீதி, இடைப்பாடி சாலை, காளியம்மன் கோவில் பகுதி, சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியாகும். இங்குள்ள பலரும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து, பல பொருட்களை வீடுகளின் முன் வைத்துள்ளனர்.
இதனால் இவ்வழியாக வரும் ஆட்டோ, கார், டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, போக்குவரத்து எளிதில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.