/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்படையில் வெறிநாய் பிடிக்கும் பணி துவக்கம்
/
வெப்படையில் வெறிநாய் பிடிக்கும் பணி துவக்கம்
ADDED : செப் 25, 2025 02:23 AM
பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை சுற்று வட்டார பகுதியில், கடந்த ஒரு மாதமாக வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வெப்படை அடுத்த லட்சமிபாளையம் பகுதியில் வெறிநாய் கடித்து, இரண்டு ஆடுகள் இறந்தன. வெப்படை சுற்றுவட்டாரத்தில், எப்போதும் இல்லாத அளவிற்கு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
இதுகுறித்த, எலந்தகுட்டை பஞ்., செயலாளர் கூறியதாவது: எலந்தகுட்டை பஞ்.,க்குட்பட்ட வெப்படை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும், நேற்று முதல் கோவையை சேர்ந்த தொண்டு நிறுவனம் அமைப்பின் குழுவினர் நாய் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, 100 நாய்களை வாகனங்களில் பிடித்து கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். கருத்தடைக்கு பின் மீண்டும் அந்த நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.