/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொல்லிமலையில் 'ரூட்மேப்' பலகை
/
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொல்லிமலையில் 'ரூட்மேப்' பலகை
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொல்லிமலையில் 'ரூட்மேப்' பலகை
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொல்லிமலையில் 'ரூட்மேப்' பலகை
ADDED : ஜூன் 24, 2025 01:57 AM
சேந்தமங்கலம், கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் வெளியூர் பயணிகளின் வசதிக்காக, மாசிலா அருவி அருகே, 'ரூட்மேப்' பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. மூலிகைகள் நிறைந்த மலைக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மாசிலா அருவியில் குளித்து மகிழ்கின்றனர். பின், மற்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வெளியூரில் இருந்து புதிதாக வரும் சுற்றுலா பயணிகள், மாசிலா அருவியில் குளித்து முடித்துவிட்டு, மற்ற இடங்களுக்கு எப்படி செல்வது என தெரியாமல் தடுமாறுகின்றனர். சிலர், அங்குள்ள பழ வியாபாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் வழிதெரியாமல் நடுவனத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
இதையடுத்து, வெளியூர் பயணிகளின் வசதிக்காக, கொல்லிமலை யூனியன் சார்பில், 'ரூட்மேப்' பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாசிலா அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள், 'ரூட்மேப்'பை பார்த்து தெரிந்துகொண்டு எளிதாக மற்ற இடங்களுக்கு சென்று ஆனந்தமாக பொழுதை கழித்து நிம்மதியாக
வீட்டுக்கு செல்கின்றனர்.